ராணுவ மந்திரியாக பதவியேற்பு: நிர்மலா சீதாராமனுக்கு ஏ.சி.சண்முகம் வாழ்த்து
புதிய நீதிக்கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
சென்னை,
மத்திய மந்திரி சபையில் வர்த்தக இணை மந்திரியாக பொறுப்பு வகித்து வந்த நிர்மலா சீதாராமன், மாற்றியமைக்கப்பட்ட மந்திரி சபையில் ராணுவ மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது தமிழகத்துக்கு பெருமையளிக்கக் கூடியதாகும். இவருக்கு முன்பு மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி ராணுவ துறையை கூடுதல் பொறுப்பாக நிர்வகித்து வந்தார். அவருக்கு அடுத்து 2-வது பெண்மணியாக தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீதாராமன் ராணுவ மந்திரியாக பொறுப்பேற்பது, அவருடைய நேர்மைக்கும், உழைப்புக்கும், திறமைக்கும் கிடைத்த கவுரவமாகும்.
அவர் சிறந்த நிர்வாக திறமை மிக்கவர். பிரதமர் நரேந்திரமோடியின் நம்பிக்கைக்கு பெரிதும் பாத்திரமானவர். இப்படிப்பட்ட ஒருவருக்கு இந்த உயர்ந்த பதவி கிடைத்திருப்பது பொருத்தமானதே ஆகும். நிர்மலா சீதாராமனுக்கு புதிய நீதிக்கட்சியின் சார்பில் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story