எம்.எல்.ஏ.க்களை அடைத்து வைப்பதை ஏற்க முடியாது அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி


எம்.எல்.ஏ.க்களை அடைத்து வைப்பதை ஏற்க முடியாது அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 5 Sept 2017 11:03 AM IST (Updated: 5 Sept 2017 11:03 AM IST)
t-max-icont-min-icon

எம்.எல்.ஏ.க்களை அடைத்து வைப்பதை ஏற்க முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னை,

அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்சியையும், ஆட்சியையும் கட்டுக் கோப்புடன் கொண்டு செல்கிறார். தொகுதி பிரச்சினை மற்றும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து விவாதிக்க அவ்வப்போது எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டி முதல்-அமைச்சர் விவாதித்து வருகிறார். இதற்காக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அவ்வப்போது நடப்பது வழக்கமாகும்.

வருகிற 12-ந்தேதி கட்சியின் பொதுக்குழு கூட உள்ளதால் கூட்டத்தை சிறப்பாக நடத்துவது குறித்தும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கிறோம். இதில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பங்கேற்பார்கள்.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிலர் புதுச்சேரி விடுதியில் வலுக்கட்டாயமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை சுயமாக செயல்பட விடாமல் அடைத்து, வைப்பதை ஏற்க முடியாது.   சுதந்திரமாக செயல்பட அவர்களை 
அனுமதிக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

Next Story