அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை புறக்கணித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் புறக்கணித்தனர்
சென்னை
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் அ.தி.மு.க. எம்.எல். ஏ.க்கள் கூட்டம் நடக்கிறது. இதில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கிறார்கள்.
தினகரனை ஆதரிக்கும் 20 எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரி சின்ன வீராம்பட்டினத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்தனர். அவர்களில் 15 பேர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றிருந்தனர்.அவர்களில் சில எம்.எல். ஏ.க்கள் அணி தாவி எடப்பாடி நடத்தும் கூட்டத்துக்கு வரக்கூடும் என்று கூறப்பட்டது. ஆனால் தினகரனை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் யாரும் இன்று அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு வரவில்லை. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் கள் கூட்டத்தை 20 எம்.எல்.ஏ.க் களும் முழுமையாக புறக்கணித்தனர்.
இது குறித்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் கூறியதாவது:-
அதர்மத்தை எதிர்க்க ஒன்றாக விடுதியில் தங்கியுள்ளோம்.டிடிவி தினகரன் கட்சியில் இல்லை என்று கூறுவதற்கு ஜெயக்குமாருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெறும் எம்.எல்.ஏக்கள் கூட்டம் சட்டப்படி செல்லாது.முதலமைச்சர் அணியினர் சமாதானத்திற்கு அழைப்பதாக கூறுவது தவறான தகவல். மாணவி அனிதா குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஏன் செல்லவில்லை? இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story