அ.தி.மு.க. அலுலவகம் யாருக்கு சொந்தம் அமைச்சர் - தினகரன் ஆதரவாளர்களிடையே மோதல்


அ.தி.மு.க. அலுலவகம் யாருக்கு சொந்தம் அமைச்சர் - தினகரன் ஆதரவாளர்களிடையே மோதல்
x
தினத்தந்தி 5 Sept 2017 12:35 PM IST (Updated: 5 Sept 2017 12:35 PM IST)
t-max-icont-min-icon

நன்னிலம் ஒன்றிய அ.தி.மு.க. அலுலவகம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக அமைச்சர் ஆர். காமராஜ் - தினகரன் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதியில்  அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர். காமராஜ் தமிழக உணவுத்துறை அமைச்சராக உள்ளார்.

நன்னிலம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக ராம குணசேகரன், வடக்கு ஒன்றிய செயலாளராக அன்பு ஆகியோர் இருந்து வந்தனர். இவர்கள் இருவரும் எடப்பாடி பழனிச்சாமி அணியை சேர்ந்தவர்கள்.

இந்த நிலையில் இவர்களை நீக்கி விட்டு தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக உதய குமார், வடக்கு ஒன்றிய செயலாளராக பாண்டியன் ஆகியோரை டி.டி.வி. தினகரன் அறிவித்தார். இதனை எடப்பாடி பழனிசாமி அணியினர் ஏற்க மறுத்தனர்.

இந்த நிலையில் நன்னிலம் ஒன்றிய அ.தி.மு.க. அலுவலகம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி அணியினருக்கும், டி.டி.வி.தினகரன் அணியினருக்கும் தகராறு ஏற்பட்டது.

இது தொடரபான பேச்சு வார்த்தை நன்னிலம் தாசில் தார் தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது. இரவு 10.30 மணி வரை நடைபெற்ற பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் ஏற்படவில்லை. இதனால் ஆர்.டி.ஓ. தலைமையில் பேச்சு வார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

இதற்காக இரு தரப்பை சேர்ந்த 5 பேர் நியமிக்கப்பட்டனர். அதன் படி இன்று ஆர்.டி.ஓ. முத்து மீனாட்சி தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. பதற்றம் நிலவுவதால் கட்சி அலுவலகம் முன் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். 

Next Story