நித்யானந்தா ‘வீடியோ’ விவகாரம்: மறுவிசாரணை கேட்டு ஐகோர்ட்டில் ரஞ்சிதா வழக்கு
நித்யானந்தா, நடிகை ரஞ்சிதா ஆகியோர் இருக்கும் ஒரு வீடியோ காட்சி தனியார் தொலைக்காட்சியில் வெளியானது.
சென்னை,
நித்யானந்தா, நடிகை ரஞ்சிதா ஆகியோர் இருக்கும் ஒரு வீடியோ காட்சி தனியார் தொலைக்காட்சியில் வெளியானது. இதையடுத்து நித்யானந்தா தியான பீடத்தின் நிர்வாகி, சென்னை போலீசில் புகார் செய்தார்.
நவீன தொழில்நுட்பம் மூலம் போலியாக சித்தரிக்கப்பட்ட இந்த வீடியோ காட்சியை காட்டி தங்களிடம் ஒரு கும்பல் பணம் கேட்டு மிரட்டுவதாக அவர் கூறியிருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் லெனின், ஐய்யப்பன், ஆர்த்தி ராவ் உள்பட பலர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சைதாப்பேட்டை 11–வது குற்றவியல் கோர்ட்டில் விசாரிக்கப்படுகிறது.
இந்த வழக்கை மறு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் நடிகை ரஞ்சிதா மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘நித்யானந்தாவுக்கு எதிராக ஆர்த்திராவ், பரத்வாஜ் ஆகியோர் கூட்டுசதி செய்துள்ளனர். இவர்கள் இடையே நடந்த இ–மெயில் உரையாடல் குறித்தும், கர்நாடக மாநில செசன்சு கோர்ட்டில் உள்ள ‘மார்பிங் வீடியோ கேசட்’ குறித்தும் விசாரிக்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், இந்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிட்டார்.

Related Tags :
Next Story