பல் மருத்துவ கலந்தாய்வுக்கு இன்று விண்ணப்பிக்காதவர்களும் வரலாம்
மருத்துவ கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்காதவர்களும் இன்று நடைபெறும் பல் மருத்துவ கலந்தாய்வுக்கு வரலாம் என்று மருத்துவ தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் செல்வராஜ் தெரிவித்தார்.
சென்னை,
மருத்துவ கல்விக்கான கலந்தாய்வு கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கி, எம்.பி.பி.எஸ். படிப்புக்கான ஒதுக்கீடு 3-ந் தேதியுடன் முடிவடைந்தது. 4-ந் தேதி மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு வகுப்பு தொடங்கின. பல் மருத்துவ கலந்தாய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இடங்கள் அதிகமாக இருப்பதால் மருத்துவ கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்காத மாணவ-மாணவிகளும் இன்று நடைபெறும் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம். அதேபோல ஏற்கனவே கலந்தாய்வில் பங்கேற்காதவர்களும் வரலாம்.
நீட் தேர்ச்சி
அப்படி வருபவர்கள் கண்டிப்பாக நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதற்கான நீட் ஸ்கோர் கார்டு, பிளஸ்-2 மதிப்பெண் சான்று, பிளஸ்-2 ஹால் டிக்கெட் உள்ளிட்ட சான்றுகளை கொண்டுவர வேண்டும். இந்த மாணவர்கள் அனைவரும் நேரடியாக இன்று பகல் 2 மணிக்கு வரவேண்டும்.
இவ்வாறு டாக்டர் செல்வராஜ் தெரிவித்தார்.
இதற்கிடையே நேற்று நடைபெற்ற கலந்தாய்வில், 8 ஆயிரத்து 232 பேர் அழைக்கப்பட்டு இருந்தனர்.
இதில் 403 பேர் மட்டுமே வந்திருந்தனர். இந்த கலந்தாய்வு மூலம் 325 ஒதுக்கீட்டு இடங்களும், 15 மறுஒதுக்கீட்டு இடங்களும் நிரப்பப்பட்டன.

Related Tags :
Next Story