ஜெயலலிதாவிடம் சொல்லி மருத்துவ ‘சீட்’ பெற்றவர் கிருஷ்ணசாமி முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி கடும் தாக்கு
மகளுக்கு ஜெயலலிதாவிடம் சொல்லி மருத்துவ ‘சீட்’ பெற்றவர் தான் கிருஷ்ணசாமி என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி கூறினார்.
சென்னை,
போதிய மதிப்பெண் எடுக்காத தனது மகளுக்கு ஜெயலலிதாவிடம் சொல்லி மருத்துவ ‘சீட்’ பெற்றவர் தான் கிருஷ்ணசாமி என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில குழு உறுப்பினரும், திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பாலபாரதி நேற்று அளித்த பேட்டி வருமாறு:-
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ‘நீட்’ தேர்வுக்கு ஆதரவாக தற்போது பேசி வருகிறார். கடந்த 2015-ம் ஆண்டு சட்டசபையில் டாக்டர் கிருஷ்ணசாமி பேசிக் கொண்டு இருந்த போது, ‘அமைச்சர் ஒருவர் எழுந்து உங்கள் மகளுக்கு போதிய மதிப்பெண்கள் இல்லாத போதும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் வந்து மருத்துவ படிப்பில் சேர உதவி கேட்டீர்கள். அடுத்த நிமிடமே முதல்-அமைச்சர் ஜெயலலிதா, ‘உங்கள் மகளுக்கு எம்.பி.பி.எஸ். சீட்டு வாங்கிக் கொடுத்தாரே? அதை மறந்து விட்டீர்களா? என கேட்டார்.
அந்த சமயத்தில் கிருஷ்ணசாமி நான் மறக்கவில்லை. அதற்காக இப்போதும் நன்றி கூறுகிறேன் என்று முதல்- அமைச்சர் ஜெயலலிதாவை பார்த்து வணக்கம் போட்டார். அந்த வணக்கத்தை வேறு எங்காவது போடுங்கள் என்பது போல ஜெயலலிதா தனது முகத்தை திருப்பிக் கொண்டார். அப்போது டாக்டர் கிருஷ்ணசாமியின் சுயநலம் வெளிப்பட்டது.
ஒரு தலித் குழந்தைக்கு அத்தகைய உதவி பெற்றதில் தவறு இல்லை. ஆனால் இப்படி புறவாசல் வழியாக உதவியை பெற்றுக் கொண்டவர் தனது மகளுக்கு ஒரு நீதி, நீட் தேர்வால் மருத்துவம் படிக்க முடியாமல் போன அனிதாவுக்கு இன்னொரு நீதி என முழங்கி வருவது தான் வேதனை.
டாக்டர் கிருஷ்ணசாமி தலித் மக்களை வைத்து அரசியல் செய்வதில் கில்லாடி. ஊடகங்கள் தான் கிருஷ்ணசாமியை தேடி பிடித்து கருத்து கேட்கிறார்கள். இதில் என்னை யார்? என்றே தெரியாது என டாக்டர் கிருஷ்ணசாமி கூறி வருவதாக அறிந்தேன்.
திண்டுக்கல் தொகுதியில் 3 முறை தொடர்ந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்றத்தில் முதல் வரிசையில் அமர்ந்திருந்தேன். நான் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து சில இருக்கைகள் தள்ளி இவர் அமர்ந்திருந்தார்.
இவர் என்னைப்பார்த்து யார் என்றே தெரியாது என கூறியிருக்கிறார். இவர் டாக்டர் என்று தான் நான் நினைத்திருந்தேன். இவ்வளவு பெரிய நோயாளியாக இருப்பார் என்று தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story