திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் மீது போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் வைகோ அறிக்கை


திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் மீது போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் வைகோ அறிக்கை
x
தினத்தந்தி 7 Sept 2017 12:04 AM IST (Updated: 7 Sept 2017 12:04 AM IST)
t-max-icont-min-icon

திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் மீது போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் வைகோ கூறியுள்ளார்.

சென்னை, 

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்துத் துண்டு பிரசுரங்களை மாணவர்கள் மத்தியில் வழங்கியதற்காக கல்லூரி மாணவி வளர்மதி மீது போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்ட வழக்கை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்து அறிவித்தது நீதித்துறை ஜனநாயகத்தை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

காவல்துறையினுடைய நியாயமற்ற அணுகுமுறையால் ஈழத்தமிழர்கள் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு வந்த திருமுருகன் காந்தி உள்ளிட்டவர்களை போலீசார் கைது செய்து புழல் மத்திய சிறையில் அடைத்தனர். வெந்த புண்ணில் வேல் வீசுவது போல் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் டைசன், மாநில ஒருங்கிணைப்பாளர் இளமாறன் மற்றும் அருண்குமார் உள்ளிட்ட நால்வர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுத்து, சிறையிலிருந்து பிணையில் வெளிவர இயலாத வகையில் காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது பாசிச நடவடிக்கை ஆகும். எனவே திருமுருகன் காந்தி உள்ளிட்ட நால்வர் மீதும் போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்ட வழக்கை தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரத்துச்செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.


Next Story