135 எம்.எல்.ஏ.க்களும் தமிழக அரசுக்கு ஆதரவாகத்தான் உள்ளனர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி


135 எம்.எல்.ஏ.க்களும் தமிழக அரசுக்கு ஆதரவாகத்தான் உள்ளனர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 7 Sept 2017 5:15 AM IST (Updated: 7 Sept 2017 12:30 AM IST)
t-max-icont-min-icon

135 எம்.எல்.ஏ.க்களும் தமிழக அரசுக்கு ஆதரவு அளிப்பதால் பெரும்பான்மை பலம் உள்ளது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

கோவை,

ஈரோட்டில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி:- அ.தி.மு.க. ஆட்சி மீது மு.க.ஸ்டாலின் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் கூறி வருகிறாரே?

பதில்:- நாங்கள் ஆட்சி பொறுப்புக்கு வந்த நாள் முதல் அவர் தொடர்ந்து அரசு மீது குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அவரது குற்றச்சாட்டுகள் தவறானது.

கேள்வி:- சென்னையில் நடந்த கூட்டத்தில் 109 எம்.எல்.ஏ.க்கள் தான் பங்கேற்றனர். அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்பதால் மைனாரிட்டி அரசு நடப்பதாக மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறாரே?

பதில்:- அ.தி.மு.க.வுக்கு 134 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். சபாநாயகர் உள்பட மொத்தம் 135 எம்.எல்.ஏ.க்கள் அ.தி.மு.க. வில் தான் உள்ளனர். எனவே இந்த அரசுக்கு பெரும்பான்மை பலம் உள்ளது.

கேள்வி:- நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்களே?

பதில்:- நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று இறுதிவரை மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து போராடினோம். உச்சநீதிமன்றத்தில் நமக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை. தீர்ப்பை அமல்படுத்த வேண்டிய சூழ்நிலையில் அரசு இருக்கிறது. மாநில அரசை பொறுத்தவரை தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story