வதந்திகளை நம்ப வேண்டாம் 10 ரூபாய் நாணயங்கள் அனைத்தும் செல்லும்


வதந்திகளை நம்ப வேண்டாம் 10 ரூபாய் நாணயங்கள் அனைத்தும் செல்லும்
x
தினத்தந்தி 7 Sept 2017 1:00 AM IST (Updated: 7 Sept 2017 12:38 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசால் தயாரிக்கப்பட்ட நாணயங்களை ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விடுகிறது.

சென்னை,

மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசால் தயாரிக்கப்பட்ட நாணயங்களை ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விடுகிறது. ரூபாய் நோட்டுகளை விட நாணயங்கள் நீண்ட காலத்திற்கு புழக்கத்தில் இருக்கும். ஆகவே ஒரே மதிப்பில் வெவ்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் நாணயங்கள் புழக்கத்தில் இருந்து வருகிறது. அந்த வகையில் புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு தயாரிக்கப்பட்டன.

ஏற்கனவே புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்களில் இருந்து அவை சற்றே மாறுபட்டுத் தோன்றினாலும், இரண்டுமே சட்டப்படி செல்லுபடியாகும். மேலும் அவை அனைத்து விதமான பரிவர்த்தனைகளுக்கும் ஏற்றவை.

எனவே 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்று பரவி வரும் வதந்திகளை பொதுமக்கள் புறக்கணித்து அவற்றை தொடர்ந்து பயன்படுத்தலாம். புதிய மற்றும் பழைய 10 ரூபாய் நாணயங்கள் அனைத்தும் புழக்கத்தில் நீடிக்கும். இதனை தடையோ, ரத்தோ செய்யவில்லை. பொது மக்களும், வணிகர்களும் 10 ரூபாய் நாணயங்களை பயன்படுத்துவதற்கு தடையேதும் கிடையாது என்று ரிசர்வ் வங்கி திட்டவட்டமாக தெரிவிக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story