ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தக்கோரி வழக்கு ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
6 மாதங்களுக்கு மேலாக காலியாக இருக்கும் ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை,
6 மாதங்களுக்கு மேலாக காலியாக இருக்கும் ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
தமிழக சட்டசபைக்கு கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில், ஆர்.கே.நகர் தொகுதியில் மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறந்தார். இதையடுத்து ஆர்.கே.நகருக்கு கடந்த ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.
இந்த தேர்தலில் அ.தி.மு.க. இரண்டாக பிரிந்து கிடந்ததால், அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் டி.டி.வி.தினகரனும், அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் மதுசூதனனும் போட்டியிட்டனர்.
ஆனால், டி.டி.வி.தினகரன் தரப்பில், வாக்காளர்களுக்கு பணமும், பரிசு பொருட்களும் வாரி வழங்கப்பட்டதாக குற்றம் சுமத்தி, இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் தள்ளி வைத்தது.
இதன் பின்னர் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் எந்த ஒரு தகவலையும் வெளியிடாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டில் மதுரையை சேர்ந்த ரமேஷ் என் பவர் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி காலியாக இருக்கும் சட்டமன்ற தொகுதிக்கு 6 மாதத்துக்குள் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்.
ஆனால், ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இதற்கு காரணம் அதிக அளவில் நடை பெறும் தேர்தல் முறைகேடு தான். 2009-ம் ஆண்டு மதுரை திருமங்கலம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தபோது, வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்கி மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்தது. இந்த முறைகேட்டை குறிப்பிடும் விதமாக ‘திருமங்கலம் பார்முலா’ என்றே பலர் அழைக்கின்றனர்.
அதேபோல, 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டு, மிகப்பெரிய முறைகேடு நடந்தது. இது குறித்து மாநிலம் முழுவதும் 3,742 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசியல்வாதிகளிடம் இருந்து ரூ.27 கோடியே 93 லட்சத்து 42 ஆயிரம் பறி முதல் செய்யப்பட்டுள்ளது.
இத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் அரசியல்வாதிகள் மீது கடுமையான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுப் பதில்லை.
2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது, அனைத்து தொகுதிகளிலும் பண பட்டுவாடா நடந்தது. ஆனால், தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் மட்டும் முறைகேடு நடந்ததாக கூறி, தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.
ஓட்டுக்கு பணம் வாங்குபவர்கள், கொடுப்பவர்கள் ஆகியோருக்கு சிறை தண்டனை விதிக்கும் விதமாக சட்டரீதியான நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடவேண்டும். அப்போதுதான் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறாது.
இந்த நிலையில், 6 மாதங்களுக்கு மேலாக காலியாக இருக்கும் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தலை நடத்தக்கோரி ஜூலை 3-ந் தேதி தேர்தல் ஆணையத்துக்கு நான் கோரிக்கை மனு அனுப்பியும், இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடவேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Related Tags :
Next Story