பாரிவேந்தர் மீதான மோசடி வழக்கை ரத்து செய்ய முடியாது ஐகோர்ட்டு உத்தரவு
பாரிவேந்தர் மீதான மோசடி வழக்கை ரத்து செய்ய முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாகக்கூறி பல மாணவர்களின் பெற்றோரிடம் பல கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக வேந்தர் மூவிஸ் நிறுவனத்தின் அதிபர் மதன், எஸ்.ஆர்.எம். கல்வி குழுமத்தின் தலைவர் பாரிவேந்தர் ஆகியோருக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து இந்த வழக்கில் பாரிவேந்தருக்கு அளிக்கப்பட்ட நிபந்தனை ஜாமீனில், ரூ.85 கோடியை சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் உத்தரவாதமாக செலுத்த வேண்டும் என்றும் அந்த தொகையை பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் உரிய ஆதாரங்களைக் காட்டி பெற்றுக்கொள்ளலாம் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தநிலையில், தன் மீது தொடரப்பட்ட மோசடி வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் பாரிவேந்தர் மனு தாக்கல் செய்தார். அதேபோல, தங்களுக்கு வழங்கவேண்டிய பணத்தை பிரித்து தர உத்தரவிடவேண்டும் என்று பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.ரமேஷ் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
பாரிவேந்தர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது. எனவே, அவர் மீதான வழக்கை விரைவாக விசாரித்து, 8 வாரத்துக்குள் குற்றப்பத்திரிகையை சம்பந்தப்பட்ட கோர்ட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்யவேண்டும்.
இந்த வழக்கில் ஜாமீன் உத்தரவாதமாக கீழ் கோர்ட்டில் பாரிவேந்தர் செலுத்தியுள்ள தொகையை வருகிற 20-ந் தேதிக்குள், பாதிக்கப்பட்ட 136 மாணவர்களின் பெற்றோருக்கு பிரித்து வழங்கவேண்டும். இந்த தொகையை சரியாக பிரித்து வழங்கும் பணியை மேற்கொள்ள ஐம்மு-காஷ்மீர் ஐகோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதி என்.பால்வசந்தகுமாரை நியமிக்கிறேன். அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் போலீசாரும், இந்த ஐகோர்ட்டும் செய்து கொடுக்கவேண்டும். இந்த பணியை மேற்கொள்ளும் நீதிபதி என்.பால்வசந்தகுமாருக்கு, பாரிவேந்தர் ரூ.5 லட்சத்தை கட்டணமாக வழங்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story