வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் மேலும் மழை நீடிக்கும்; வானிலை ஆய்வு மையம் தகவல்


வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் மேலும் மழை நீடிக்கும்; வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 7 Sept 2017 3:15 AM IST (Updated: 7 Sept 2017 1:54 AM IST)
t-max-icont-min-icon

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது.

சென்னை,

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. மேலும் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் 10 செ.மீட்டரும், தஞ்சை மாவட்டம் கல்லணையில் 8 செ.மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம், தேனி மாவட்டம் பெரியகுளம், திருச்சி மாவட்டம் சமயபுரம் ஆகிய இடங்களில் 7 செ.மீட்டரும், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், பேச்சிப்பாறை, வேலூர் மாவட்டம் வாணியம்பாடி, திருச்சி மாவட்டம் முசிறி, காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் தலா 6 செ.மீட்டர் மழையும் பெய்துள்ளது.

சேலம் மாவட்டம் ஏற்காடு, கடலூர் மாவட்டம் தொழுதூர், தஞ்சை மாவட்டம் பாபநாசம், திருவையாறு, பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளம், நாமக்கல், திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கம், பூந்தமல்லி, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி, போச்சம்பள்ளி, திண்டுக்கல் மாவட்டம் காமாட்சிபுரம், அரியலூர், கன்னியாகுமரி மாவட்டம் இரணியல், வேலூர், தர்மபுரி ஆகிய இடங்களில் தலா 5 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம், திருச்செங்கோடு, ஈரோடு மாவட்டம் பவானிசாகர், சத்தியமங்கலம், கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், குழித்துறை, தக்கலை, சேலம் மாவட்டம் மேட்டூர், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பர்கூர், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், செஞ்சி, நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உள்பட தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது.

இந்தநிலையில் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய கனமழையோ பெய்யக் கூடும்.

சென்னை நகரை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். மாலையில் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Next Story