தினகரன் அணியில் இருந்து கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன் எடப்பாடிக்கு ஆதரவு


தினகரன் அணியில் இருந்து கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன்  எடப்பாடிக்கு ஆதரவு
x
தினத்தந்தி 7 Sept 2017 12:51 PM IST (Updated: 7 Sept 2017 12:51 PM IST)
t-max-icont-min-icon

தினகரன் அணியில் இருந்து கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.

சென்னை

தினகரன் அணியை சேர்ந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கடந்த மாதம் 22-ந் தேதி கவர்னரை சந்தித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதம் கொடுத்தனர்.

அதைத்தொடர்ந்து அந்த எம்.எல்.ஏ.க்களில் வெற்றிவேல் தவிர, 18 பேர் புதுவைக்கு அழைத்து வரப்பட்டனர். எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இருந்து இந்த எம்.எல்.ஏ.க்களை இழுத்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் புதுவை ஓட்டலில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டனர்.  இடையில் மேலும் 2 எம்.எல்.ஏ.க்கள் இவர்களுடன் சேர்ந்து கொண்டனர். இடைப்பட்ட காலத்தில் சில எம்.எல். ஏ.க்கள் பல்வேறு பணிகளுக்காக சொந்த ஊருக்கு சென்று விட்டு திரும்பி வந்தனர்.

இந்த நிலையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இன்று கவர்னரை 
சந்திப்பதற்கு அனுமதி கேட்டு இருந்தனர். கவர்னர் அனுமதி அளித்தார். இதனால் புதுவையில் தங்கி இருந்த எம்.எல்.ஏ.க்கள் இன்று காலை 7.45 மணி அளவில் இங்கிருந்து காரில் சென்னை புறப்பட்டனர்.

இந்த நிலையில்  தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வான  கம்பம் தொகுதி எம்.எல்.ஏ ஜக்கயன் தினகரன் அணியில் இருது தற்போது எடப்பாடி அணிக்கு தாவி உள்ளார். தினகரன் அணியில் இருந்த கம்பம் தொகுதி எம்.எல்.ஏ ஜக்கையன் முதலமைச்சர் பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.

ஆளுநரிடம் கொடுத்த  தனது கடிதத்தை திரும்ப பெறுவது என  முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடரபாக அவர் சபாநாயகரை சந்திக்க உள்ளார்.

Next Story