சென்னை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திப்பதை தவிர்த்த டி.டி.வி.தினகரன்
துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை 6 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து மதுரைக்கு புறப்பட்டு சென்றார்.
சென்னை
தமிழக துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை 6 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து மதுரைக்கு புறப்பட்டு சென்றார். இதற்காக அவர், மாலை 5.30 மணிக்கு 1–வது நுழைவு வாயில் வழியாக விமான நிலையம் உள்ளே சென்றார்.
அ.தி.மு.க.(அம்மாஅணி) துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மாலை 6.30 மணி விமானத்தில் மதுரை செல்ல மாலை 5.20 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்து 2–வது நுழைவு வாயில் வழியாக சென்றார்.
ஓ.பன்னீர்செல்வத்தை நேருக்கு நேராக சந்திப்பதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக ஓய்வறையில் தங்கி இருந்த டி.டி.வி.தினகரன், துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமானத்தில் ஏறிச்சென்ற பின்னரே விமானத்தில் ஏற வெளியே வந்தார் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story