ஆசிரியர்கள் பணிக்கு வராததால் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்திய சேலம் கலெக்டர்


ஆசிரியர்கள் பணிக்கு வராததால் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்திய சேலம் கலெக்டர்
x
தினத்தந்தி 8 Sept 2017 12:36 AM IST (Updated: 8 Sept 2017 12:36 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி நேற்று ஆத்தூர் அருகே கருத்தராஜாபாளையத்தில் உள்ள கிராம சேவை மைய கட்டிடத்தில் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

ஆத்தூர்,

சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி நேற்று ஆத்தூர் அருகே கருத்தராஜாபாளையத்தில் உள்ள கிராம சேவை மைய கட்டிடத்தில் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள ஊராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தில் ஜாக்டோ-ஜியோ போராட்டம் நடந்ததால், ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் மாணவ-மாணவிகள் வகுப்புகளுக்கு வெளியே நின்று கொண்டு இருந்தனர்.

இதைப் பார்த்த கலெக்டர் ரோகிணி அந்த பள்ளிக்கு சென்றார். வெளியே நின்று கொண்டிருந்த மாணவ-மாணவிகளை வகுப்புகளுக்கு அழைத்துச் சென்று உட்கார வைத்தார். பின்னர் 5-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு அவர் ஆங்கில பாடம் நடத்தினார். அப்போது மாணவ-மாணவிகளின் சந்தேகங்களுக்கு அவர் பதில் அளித்தார்.

Next Story