தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது ஐகோர்ட்டு உத்தரவு
உரிமைக்குழு அனுப்பிய நோட்டீசின் அடிப்படையில், மு.க.ஸ்டாலின் உள்பட 21 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் தமிழகத்தில் தாராளமாக விற்பனை செய்யப்படுவதாக கூறி, அந்த புகையிலை பொருட்களை சட்டசபைக்கு கொண்டு வந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் காட்டினர். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த சபாநாயகர் ப.தனபால், தடை செய்யப்பட்ட பொருட்களை அவைக்குள் கொண்டு வந்த எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க உரிமை மீறல் குழுவுக்கு பரிந்துரை செய்தார். இதன்படி, தமிழக எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட 21 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் விளக்கம் அளிக்கும்படி உரிமைக்குழு நோட்டீசு அனுப்பியது.
இந்த நோட்டீசுக்கு விளக்கம் அளிக்க சபாநாயகரிடம், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கால அவகாசம் கேட்டனர். அதேநேரம், உரிமைக்குழு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட 21 பேரும் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த மனுவில், ‘சட்டசபைக்குள் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை கொண்டு சென்ற பிரச்சினை தொடர்பாக கடந்த 40 நாட்களாக சபாநாயகர் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. தி.மு.க. தமிழகத்தில் பிரதான கட்சி. அதனால், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தன்னுடைய பெரும்பான்மையை நிரூபிக்கக்கோரி தமிழக கவர்னரிடம் மனு கொடுத்தோம். இதன்பிறகு தான் குட்கா விவகாரத்தை கையில் எடுத்து, உரிமைக்குழு எங்களுக்கு நோட்டீசு அனுப்பியுள்ளது. எங்கள் மீது நடவடிக்கை எடுத்தால், குறுக்கு வழியில் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்துவிடலாம் என்று ஆளும் கட்சி நினைக்கிறது. எனவே, உள்நோக்கத்துடன் எங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீசை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி எம்.துரைசாமி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல்கள் கபில்சிபில், அமரேந்திர சரண் உள்பட பலர் ஆஜராகி வாதிட்டார்கள்.
அவர்கள் தங்களது வாதத்தில், ‘குட்காவை சட்டசபைக்கு கொண்டு செல்வதை தடுக்க சட்டசபை விதிகள் எதுவும் இல்லை. குட்காவை கொண்டு சென்றதால் சபையின் மாண்பு குறைந்து விட்டதாகக் கூறுவதும் தவறு. ஆளும் கட்சியான அ.தி.மு.க.வின் உள்கட்சி பூசல் உச்சக்கட்டத்தில் உள்ளது. அதனால், இந்த உரிமை மீறல் விவகாரத்தை, சம்பவம் நடந்து 40 நாட்களுக்கு பின்னர் நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. புற்றுநோயை உருவாக்கும் குட்காவை தடை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் மனுதாரர்கள் செயல்பட்டுள்ளனர். அரசின் கவனத்துக்கு கொண்டு வரவேண்டும் என்று சபைக்கு குட்காவை கொண்டு வந்து காண்பித்துள்ளனர்’ என்று வாதிட்டார்கள்.
தமிழக சட்டசபை செயலாளர் சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண், ‘தற்போது மனுதாரர்களுக்கு எதிராக சட்டசபை உரிமை மீறல் குழு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்படியிருக்கும்போது அந்த நோட்டீசை எதிர்த்து தொடரப்பட்ட இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது தானா? என்பது குறித்து விரிவாக வாதிட வேண்டியதுள்ளது. அதேநேரம், சட்டசபை நடவடிக்கையில் நீதிமன்றம் தலையிட முடியாது. மேலும் மனுதாரர்கள் வருகிற 12-ந் தேதி விளக்கம் அளிப்பதாக சபாநாயகரிடம் உத்தரவாதம் அளித்துள்ளனர்.
எனவே முதலில் அவர்கள் விளக்கம் அளிக்கட்டும். அதன்பின்னர், இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்பது குறித்து இந்த ஐகோர்ட்டு முடிவு செய்யவேண்டும்’ என்றார்.
அப்போது மூத்த வக்கீல் கபில்சிபில், ‘மனுதாரர்களுக்கு நோட்டீசு அனுப்பியதே தவறு. அப்படி இருக்கும்போது, அந்த நோட்டீசுக்கு விளக்கம் அளிக்கச்சொன்னால் அது சரியான முறையாக இருக்காது. எனவே, இந்த வழக்கு முடிவுக்கு வரும் வரை, அந்த நோட்டீசு மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும்’ என்று கூறினார்.
இதற்கு பதிலளித்த அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண், ‘இந்த வழக்கை 14-ந் தேதிக்கு தள்ளிவைக்க வேண்டும். அதுவரை மனுதாரர்கள் மீது சட்டசபை செயலாளர் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்’ என்று உத்தரவாதம் அளித்தார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி எம்.துரைசாமி, இந்த வழக்கு விசாரணையை 14-ந் தேதிக்கு தள்ளிவைத்தார். பின்னர், ‘இந்த ஐகோர்ட்டு மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, மனுதாரர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கக்கூடாது’ என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

Related Tags :
Next Story