நீட்’ தேர்வுக்கு நிரந்தர விலக்கு கோரி கல்லூரி மாணவர்கள் 7-வது நாளாக போராட்டம்
‘நீட்’ தேர்வுக்கு நிரந்தர விலக்கு அளிக்க கோரி, கல்லூரி மாணவர்கள் நேற்று 7-வது நாளாக போராட்டம் நடத்தினர்.
சென்னை,
‘நீட்’ தேர்வால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்த அரியலூர் மாணவி அனிதா மனவேதனையில் கடந்த 1-ந்தேதி தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதனால் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்துசெய்ய வேண்டும், மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் குதித்து உள்ளனர். நேற்று 7-வது நாளாக பல்வேறு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் புதுக்கல்லூரி மாணவர்கள் நேற்று 2-வது நாளாக கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசிற்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் புதுக்கல்லூரியின் முதல்வர் ஜாகீர் உசேன் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாணவர்களை சமாதானப்படுத்தினார். அதனை தொடர்ந்து மாலை நேரத்தில் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதேபோல், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 300 மாணவர்களும், சென்னை பல்கலைக்கழகத்தில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களும், சென்னை அரசு கவின் கலைக்கல்லூரில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளும் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி சார்பில் அனைத்துக்கல்லூரி மாணவர்கள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு சென்னை மாவட்ட செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். இதில், ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மாணவி ஒருவர் தனது முகத்தில் அனிதாவை போன்று முகமூடி அணிந்து கொண்டு நின்று கொண்டிருந்தார். அவரது கழுத்தில் தூக்கு கயிறு போன்று மாட்டப்பட்டிருந்தது.
அந்த கயிற்றின் ஒரு பகுதியை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை போன்று முகமூடி அணிந்திருந்த மாணவர் ஒருவரும், மற்றொரு பகுதியை பிரதமர் நரேந்திரமோடியை போன்று முகமூடி அணிந்திருந்த மாணவர் ஒருவரும் பிடித்துக்கொண்டிருந்தபடி நூதன போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டனர். போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பிரதமர் நரேந்திரமோடி, முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு எதிராக கோஷமிட்டனர்.
சென்னையை அடுத்த அம்பத்தூர் ரெயில் நிலையத்தில் சட்ட கல்லூரி, மாநில கல்லூரி, இந்து கல்லூரி, வேப்பம்பட்டு ஸ்ரீராம் கல்லூரி ஆகிய கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பட்டாபிராமில் இருந்து வேளச்சேரி சென்ற மின்சார ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அனைவரையும் கலைந்து போகும்படி போலீசார் கூறினர். இதனால் போலீசாருக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து ரெயில் மறியலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 44 பேரை போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்களை விடுதலை செய்தனர். இதனால் சென்னை புறநகர் ரெயில்கள் சுமார் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன.
ஆவடி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் நல்லத்தம்பி தலைமையில் 63 பேர் நேற்று காலை ஆவடி ரெயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இதனால் அவர்கள், ரெயில் நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனைவரையும் ஆவடி போலீசார் கைது செய்து அங்குள்ள சமுதாய கூடத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
அனிதா சாவுக்கு நீதி கேட்டும், உலக வர்த்தக மையத்தில் இருந்து இந்தியா வெளியேற கோரியும் கல்வி மீட்பு குழு என்ற அமைப்பின் சார்பில் பெண்கள் உள்பட 15-க்கும் மேற்பட்டோர் சென்னை கிண்டியில் உள்ள இந்திய அரசின் அறிவுசார் சொத்துரிமை மையத்துக்கு பூட்டு போட முயன்றனர்.
அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த தென்சென்னை இணை கமிஷனர் அன்பு தலைமையிலான போலீசார், அவர்களை குண்டு கட்டாக தூக்கிச்சென்று வெளியேற்றி கதவுகளை மூடினர். இதனால் அங்கேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 15-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர்.
இதேபோல் கிண்டி செல்லம்மாள் கல்லூரியில் படிக்கும் மாணவிகள், வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை கிழக்கு தாம்பரத்தில் உள்ள சென்னை கிறிஸ்தவ கல்லூரியை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள், நேற்று மதியம் தாம்பரம்-வேளச்சேரி பிரதான சாலையில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலையூர் போலீசார் மாணவர்களை சமாதானம் செய்து கலைந்து போக செய்தனர்.
திருவொற்றியூர் பஸ் நிலையம் அருகே அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் பாக்கியம் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள், மாணவி அனிதா சாவுக்கு நீதி கேட்டு ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story