பஸ்நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 பேர் பரிதாப பலி
கோவையை அடுத்த சோமனூரில் பஸ்நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் அரசு பஸ் கண்டக்டர் உள்பட 5 பேர் பரிதாபமாக இறந்தனர்.
கோவை,
கோவையை அடுத்த சோமனூரில் பஸ்நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் அரசு பஸ் கண்டக்டர் உள்பட 5 பேர் பரிதாபமாக இறந்தனர். அரசு பஸ் டிரைவர்கள் உள்பட 18 பேர் படுகாயம் அடைந்தனர்.
சோமனூர் பஸ் நிலையம்
கோவை அருகே உள்ள சோமனூரில் மேம்பாலம் அருகே அறிஞர் அண்ணா பஸ் நிலையம் உள்ளது. இந்த பஸ் நிலையம் கடந்த 1998-ம் ஆண்டில் கட்டப்பட்டது ஆகும். கடந்த 3 நாட்களுக்கு முன்பு சோமனூர் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் தண்ணீர் தேங்கி நின்றதால் சோமனூர் பஸ் நிலைய மேற்கூரை முழுவதும் ஈரப்பதத்துடன் காணப்பட்டது. இதை அறியாமல் பயணிகள் பஸ் நிலையத்துக்குள் பஸ்சுக்காக காத்து நின்றனர்.
இந்தநிலையில், நேற்று மதியம் 1½ மணி அளவில் இந்த பஸ் நிலையத்துக்குள் திருப்பூரில் இருந்து சோமனூருக்கு இயக்கப்படும் ‘5 ஏ’ என்ற அரசு டவுன் பஸ்சும், கோவை உக்கடத்தில் இருந்து சோமனூருக்கு இயக்கப்படும் ‘90 ஏ’ என்ற அரசு டவுன் பஸ்சும் நின்றிருந்தன. அதில் பயணிகள் சிலர் இருந்தனர்.
அதில், 90 ஏ பஸ்சை, டிரைவரான நெகமத்தை சேர்ந்த சண்முகம் (வயது 41) என்பவர் ‘ஸ்டார்ட்’ செய்தார். அந்த பஸ்சின் கண்டக்டரான ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த சிவக்குமார் (43) என்பவர் பஸ்சின் பின்னால் நின்றிருந்தார்.
இடிந்து விழுந்தது
அப்போது பஸ் நிலைய மேற்கூரையின் ஒருபகுதி திடீரென்று இடிந்து விழுந்தது. அதைப்பார்த்த சிவக்குமார், “பஸ்நிலையத்துக்குள் இருக்கும் பயணிகள் அனைவரும் வெளியே ஓடி வாருங்கள்” என்று கத்தினார். உடனே அங்கு இருந்த பயணிகள் அனைவரும் அலறியடித்தபடி வெளியே ஓடி வந்தனர்.
ஆனால் அதற்குள் 200 அடி நீளமுள்ள பஸ்நிலைய மேற்கூரை மொத்தமாக இடிந்து கீழே விழுந்து, அங்கு நின்றிருந்தவர்களை அமுக்கியது. இதில் கண்டக்டர் சிவக்குமார் உள்பட பயணிகள் பலர் சிக்கிக்கொண்டனர். மேற்கூரை இடிந்து விழுந்ததில் இரு பஸ்களும் சேதம் அடைந்தன.
5 பேர் பரிதாப சாவு
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கருமத்தம்பட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து வந்து, இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பொக்லைன் எந்திரங்களின் உதவியுடன் இடிபாடுகளை அகற்றி, படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தவர்களை ஆம்புலன்சுகள் மூலம் சூலூர், அவினாசி, கோவையில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் விபத்தில் சம்பவ இடத்திலேயே அரசு பஸ் கண்டக்டர் சிவக்குமார் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் இன்றி மேலும் 2 பேர் இறந்ததால் சாவு எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.
யார்-யார்?
இறந்தவர்கள் பெயர் விவரம் வருமாறு:-
1. சிவக்குமார் (43), அரசு பஸ் கண்டக்டர்.
2. தாரணி (20), தந்தை பெயர் சின்னசாமி. இச்சிப்பட்டி, சோமனூர். இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வந்தார்.
3. ஈஸ்வரி (40). கணவர் பெயர் ராமலிங்கம், அய்யம்பாளையம், பல்லடம்.
4. துளசி (40), கணவர் பெயர் பழனிசாமி. குளத்துப்பாளையம், சூலூர்.
5. அடையாளம் தெரியாத முதியவர்.
18 பேர் படுகாயம்
மேலும் படுகாயம் அடைந்த அரசு பஸ் டிரைவர்கள் சண்முகம் (41), ராஜாராம் (38) உள்பட 18 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கோவை மாவட்ட கலெக்டர் ஹரிகரன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை முடுக்கி விட்டனர். பின்னர் கலெக்டர் ஹரிகரன் நிருபர்களிடம் கூறும்போது, ‘பஸ்நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும்’ என்றார்.
அமைச்சரை முற்றுகையிட்டனர்
இந்த விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களையும், இறந்தவர்களின் உறவினர்களையும் பார்த்து ஆறுதல் கூறுவதற்காக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று இரவு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அப்போது இறந்தவர்களின் உறவினர்கள் அவரை முற்றுகையிட்டு, முதல்-அமைச்சர் நிவாரண நிதி அறிவித்து இருப்பது இந்த சம்பவத்துக்கு தீர்வு ஆகாது என்றும், பஸ் நிலைய கட்டிடம் முறையான பராமரிப்பு இல்லாததால் இடிந்து விழுந்துள்ளது என்றும், இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறி வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
உறவினர்களுக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
தலா ரூ.4 லட்சம் நிவாரணம்
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கோவை மாவட்டம் சூலூர் தாலுகா சோமனூர் பேரூராட்சியில் உள்ள பஸ் நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன்.
இந்தத் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்தும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்தும் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story