தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கட்டாயம் நேரில் வந்து விளக்கம் அளிக்க சபாநாயகர் தனபால் உத்தரவு
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கட்டாயம் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என சபாநாயகர் தனபால் உத்தரவிட்டு உள்ளார்.
சென்னை
எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சர் பதவியில் இருந்து விலக்கி விட்டு, தனக்கு சாதகமாக உள்ள ஒருவரை முதல்வர் பதவிக்கு கொண்டு வர வேண்டும் என்று டி.டி.வி. தினகரனும், சசிகலா குடும்பத்து உறுப்பினர்களும் ஆசைப்படுகிறார்கள். இதற்காக அவருக்கு 21 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அந்த 21 எம்.எல்.ஏ.க்களையும் கவர்னரிடம் அழைத்து சென்ற தினகரன், முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று தனித்தனியாக கடிதம் கொடுக்க வைத்தார்.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அனைவரும் புதுச்சேரியில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்கி இருந்தனர். டி.டி. வி.தினகரனிடம் உள்ள எம்.எல்.ஏ.க்களில் 7 முதல் 10 பேரை இழுக்கும் முயற்சிகளில் எடப்பாடி அணியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நேற்று கம்பம் தொகுதி எம்.எல்.ஏ ஜக்கையன் எடப்பாடி அணிக்கு ஆதரவு தெரிவித்தார். இதை தொடர்ந்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அனைவரும் குடகு மலையில் உள்ள ஒரு சொகுசு விடுதிக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.
இதற்கிடையே தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேரும் வருகிற 14-ந்தேதி (வியாழக்கிழமை) கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என்று சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார். எனவே இன்னும் 5 நாட்களில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் குடகுமலையில் இருந்து சென்னை வந்து சபாநாயகர் முன்பு ஆஜராக வேண்டியதுள்ளது.

Related Tags :
Next Story