‘அனைத்து பிரச்சினைகளுக்கும் விடைகாண முயலுங்கள்’ தமிழக அரசுக்கு சரத்குமார் வேண்டுகோள்
‘அனைத்து பிரச்சினைகளுக்கும் விடைகாண முயலுங்கள்’ தமிழக அரசுக்கு சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை,
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
கடந்த டிசம்பர் மாதம் முதல் தமிழக மக்களின், தமிழனின் தமிழகத்தின் ஒவ்வொரு உரிமையும் முன்னேற்றமும் வளர்ச்சி பாதையில் செல்லவில்லை. எங்கு பார்த்தாலும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள். இச்சூழலில், அரசியல் அதிகாரங்களை எல்லாம் தற்காலிகமாக ஒதுக்கிவைத்துவிட்டு, அரசாங்கத்தோடு சேர்ந்து ஒத்துழைத்து, ஆக்கபூர்வமான முடிவுகள் எடுக்க உதவியாக இருப்போம் என்று எண்ணும் அரசியல் நெறிகள் எதிர்க்கட்சிகளுக்கு இல்லை.
தற்போது இந்த ஆட்சி எதிர்கொள்ளும் நிலைகண்டு வேதனை அடைகிறேன். தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் சுய வெற்றி தோல்வியை பற்றி சிந்திக்காமல், மக்களின் வெற்றியை, தமிழகத்தின் வெற்றியை மனதில் கொண்டு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அமைதி பூங்காவாக இருந்த தமிழகம் போராட்டக்களமாக உருமாறி, தமிழக மக்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிடாமல், தமிழனின் அனைத்து பிரச்சினைகளுக்கும் உடனடியாக விடைகாண முயலுங்கள் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story