சென்னையில் இன்று நடைபெறுவதாக இருந்த டி.டி.வி.தினகரன் ஆர்ப்பாட்டம் ரத்து
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து, ‘நீட்’ தேர்வுக்கு எதிரான டி.டி.வி.தினகரனின் ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரியும், அதற்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், சென்னையில் இன்று (சனிக்கிழமை) டி.டி.வி.தினகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே காலை 9 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக இருந்தது.
ஆனால், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து, ‘நீட்’ தேர்வுக்கு எதிரான டி.டி.வி.தினகரனின் ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, டி.டி.வி.தினகரன் நேற்று தனது டுவிட்டரில் தெரிவித்து இருப்பதாவது:–
‘நீட்’ எதிர்ப்பு போராட்டங்கள் குறித்த சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது. இருப்பினும், நீதிமன்ற தீர்ப்பை மதித்து கட்சியின் சார்பில் நாளை (இன்று) நடைபெற இருந்த ‘நீட்’ எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story