அசல் ஓட்டுனர் உரிமம் விவகாரம்: அரசின் அறிவிப்பை பொதுமக்கள் சிரமத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்
வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுனர் உரிமத்தை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்ற அறிவிப்பை பொதுமக்கள் சிரமத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
சென்னை,
செப்டம்பர் 1-ந் தேதி முதல் வாகன ஓட்டிகள் அனைவரும் அசல் ஓட்டுனர் உரிமத்தை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதை எதிர்த்து டிராபிக் ராமசாமி, தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனம் உள்பட பலர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்குகள் அனைத்தும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக போக்குவரத்து முதன்மை செயலாளர் தயானந்த் கட்டாரியா பதில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-
புதிய உத்தரவு அல்ல
அசல் ஓட்டுனர் உரிமம் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்று மோட்டார் வாகன சட்ட விதி 130(1)-ல் கூறப்பட்டுள்ளது. இதனைத் தான் தமிழக அரசு அமல்படுத்தியதே தவிர புதிதாக உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை. போக்குவரத்து விதிகளை மீறுவதை தடுப்பதற்கும், வாகன விபத்து எண்ணிக்கையை குறைப்பதற்கும் இந்த விதியை தமிழக அரசு அமல்படுத்துகிறது.
2011-ம் ஆண்டு முதல் 2017 ஜூலை வரை மொத்தம் 3 லட்சத்து 80 ஆயிரத்து 452 விபத்துகள் நடந்துள்ளன. இதில், 5,091 பேர் இறந்துள்ளனர். 5 லட்சத்துக்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். நடப்பு நிதி ஆண்டில் சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.60 கோடி வரை நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
சிரமத்துடன் ஏற்றுக்கொள்ள...
தமிழகத்தில் கடந்த 7 மாதங்களில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 1 லட்சத்து 79 ஆயிரத்து 230 வழக்குகளும், சாலை விதிமீறல் தொடர்பாக 5 லட்சத்து 83 ஆயிரத்து 210 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுனர் உரிமத்தை காண்பித்து இருந்தால் அவர்கள் உரிமத்தை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ரத்துசெய்து நடவடிக்கை எடுத்திருக்க முடியும்.
விபத்துகளையும், உயிரிழப்புகளையும் குறைக்க வேண்டும் என்பதால் அசல் ஓட்டுனர் உரிமத்தை மோட்டார் வாகன விதி களின்படி வாகன ஓட்டிகள் வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. இதை பொதுமக்கள் சிரமத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். எனவே இந்த அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
நீதிபதிகள் வழக்கு விசாரணையை 15-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர். அதற்குள் அரசின் பதிலுக்கு மனுதாரர்கள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Related Tags :
Next Story