போராட்டம் நடத்துவதற்கு நீதிமன்றங்களோ, அரசோ குறுக்கீடாக இருப்பது சரியாக இருக்காது ஐகோர்ட்டு வக்கீல்
அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு நீதிமன்றங்களோ, அரசோ குறுக்கீடாக இருப்பது சரியாக இருக்காது என்று ஐகோர்ட்டு வக்கீல் தெரிவித்தார்.
சென்னை,
தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்களின் போராட்டம் வலுத்து வருகிறது. இந்த நிலையில் இந்த போராட்டத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தமிழகத்தில் பொது அமைதியை சீர்குலைக்கும் விதமான எந்தவித போராட்டமும் நடத்தக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு குறித்து ஐகோர்ட்டு வக்கீல் எம்.புருஷோத்தமன் கூறியதாவது:-
நீட் தேர்வை சுப்ரீம் கோர்ட்டு கொண்டு வரவில்லை. அதை மருத்துவ கவுன்சில் கொண்டு வந்தது. அது சரிதான் என்று சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல் தான் கொடுத்தது. இப்போது நீட் தேர்வுக்கு எதிராக மக்கள் போராடி வருகிறார்கள்.
இந்த போராட்டம் வலுப்பெறும்போது நீட் தேர்வு கட்டாயம் என்ற உத்தரவை மக்கள் பிரதிநிதியான எம்.பி.க்கள் முடிவு செய்யலாம். மத்திய அரசும் இந்த நீட் தேர்வை வாபஸ் பெறலாம். அப்போதும் மத்திய அரசின் முடிவுக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல் அளிக்கலாம். எதுவும் நிரந்தரம் இல்லை.
ஜனநாயக நாட்டில் பெரும்பான்மையான மக்களின் கருத்துகளை கொண்டு தான் சட்டம் கொண்டுவர முடியும். பெரும்பான்மை மக்கள் ஒரு சட்டத்தை எதிர்க்கும் போது மத்திய அரசு பரிசீலிக்க வாய்ப்பு உள்ளது. போராடும் மக்களை ஒடுக்குவதை விட அவர்களை தெளிவுபடுத்த அரசு முன்வர வேண்டும்.
அதற்காக போராட்டத்தை ஒடுக்குவது என்பது மக்களின் அடிப்படை உரிமையை பறிப்பதாகும். தங்களின் கருத்துகளை தெரிவிப்பதை தடுக்கும் விதமாகவும் இது அமையும். எனவே அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு நீதிமன்றங்களோ, அரசோ குறுக்கீடாக இருப்பது சரியாக இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story