தேர்தல் வரும் போது பாரதீய ஜனதாவுடன் கூட்டணி குறித்து பரிசீலனை: முதல் அமைச்சர் பழனிச்சாமி


தேர்தல் வரும் போது பாரதீய ஜனதாவுடன் கூட்டணி குறித்து பரிசீலனை: முதல் அமைச்சர் பழனிச்சாமி
x
தினத்தந்தி 9 Sept 2017 10:48 AM IST (Updated: 9 Sept 2017 10:47 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் வரும் போது பாரதீய ஜனதாவுடன் கூட்டணி குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று முதல் அமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

பாரதீய ஜனதாவுடன் கூட்டணி அமைப்பதில் தவறில்லை என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதல் அமைச்சர் பழனிச்சாமியிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இக்கேள்விக்கு பதிலளித்த முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, உள்ளாட்சி தேர்தல் வரும் போது பாரதீய ஜனதாவுடன் கூட்டணி அமைப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்றார். மேலும், பெரும்பான்மையான அதிமுக எம்.எல்.ஏக்கள் எங்களிடம்தான் உள்ளனர் எனவும் முதல் அமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 

Next Story