தகுதிக்கு மீறி ஆசைப்படுபவர்களுக்கு ஆமைக்கு நேர்ந்த கதி தான் ஏற்படும் - குட்டிகதை மூலம் முதல்-அமைச்சர் பழனிசாமி விளக்கம்


தகுதிக்கு மீறி ஆசைப்படுபவர்களுக்கு ஆமைக்கு நேர்ந்த கதி தான் ஏற்படும் - குட்டிகதை மூலம் முதல்-அமைச்சர் பழனிசாமி விளக்கம்
x
தினத்தந்தி 9 Sept 2017 7:08 PM IST (Updated: 9 Sept 2017 7:08 PM IST)
t-max-icont-min-icon

தகுதிக்கு மீறி ஆசைப்படுபவர்களுக்கு ஆமைக்கு நேர்ந்த கதி தான் ஏற்படும் குட்டிகதை மூலம் முதல்-அமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

வேலூர்,

வேலூர் கோட்டை மைதானத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. விழாவில் முதல்-அமைச்சர் பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். 

விழாவில் முதல்-அமைச்சர் பழனிசாமி பேசியதாவது:

வாணியம்பாடியில் புதிய தொழிற்பேட்டை திறக்கப்படும். குடிமராமத்து திட்டத்தின் மூலம் 34 ஏரிகள் சீரமைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து தற்போதுவரை ரூ 10540 கோடி மதிப்பீட்டில் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.  பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 20,544 வீடுகள் கட்டப்பட உள்ளன. வாய்ஜாலம் காட்டுபவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.  தகுதிக்கு மீறி ஆசைப்படுபவர்களுக்கு ஆமைக்கு நேர்ந்த கதி தான் ஏற்படும். வேலூர் மாவட்டத்தில் 8 துணை மின்நிலையங்கள் அமைக்கும்பணி நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story