சென்னையில் குண்டர் சட்டத்தில் 6 பேர் கைது போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நடவடிக்கை
சென்னையில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை,
சென்னையில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த சென்னை சூளைமேடு சுப்பாராவ் நகரை சேர்ந்த அருண்குமார்(வயது 24), சண்முக கணபதி(26), அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனியை சேர்ந்த பரத்குமார்(26), ரெயில்வே காலனி முதல் தெருவை சேர்ந்த ராமச்சந்திரன்(29), அமைந்தகரை இந்திராகாந்தி நகரை சேர்ந்த மணிகண்டன்(31), ராமாபுரம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த பூச்சு சுரேஷ்(24) ஆகிய 6 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Related Tags :
Next Story