அனிதா குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் திருநாவுக்கரசர் அறிவிப்பு


அனிதா குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் திருநாவுக்கரசர் அறிவிப்பு
x
தினத்தந்தி 9 Sept 2017 10:49 PM IST (Updated: 10 Sept 2017 2:10 AM IST)
t-max-icont-min-icon

அனிதா குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார்.

சென்னை, 

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழக மாணவர்கள் மீது மத்திய அரசு திணித்த நீட் தேர்வை மாநில அரசு தடுத்து நிறுத்தாத காரணத்தால் மருத்துவ படிப்பில் சேருகிற வாய்ப்பை இழந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாநில பாடத்திட்டத்தின்படி 1200–க்கு 1,176 மதிப்பெண்கள் பெற்றும், மருத்துவ படிப்பில் சேர வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் மன உளைச்சல் காரணமாக அனிதா தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த தற்கொலைக்கு மத்திய பா.ஜ.க. அரசும், மாநில அ.தி.மு.க. அரசும் தான் பொறுப்பாகும். மிக மிக ஏழ்மை குடும்பத்தில் பிறந்த, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அனிதா தற்கொலையினால் பாதிக்கப்பட்ட அவரது குடும்பத்தினருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை சார்பாக ரூ.5 லட்சம் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Next Story