ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நாளை முதல் மீண்டும் வேலைநிறுத்தம்
கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை(திங்கட்கிழமை) முதல் மீண்டும் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தெரிவித்தனர்.
சென்னை,
7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 3 கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யப்போவதாக ஏற்கனவே அறிவித்தனர். இதனை தொடர்ந்து அவர்களுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்தி வைக்கலாம் என்று தெரிவித்தனர்.
ஆனால் இதில் சிலருக்கு உடன்பாடு இல்லாததால், கூட்டமைப்பில் பிளவு ஏற்பட்டு, புதிய ஒருங்கிணைப்பாளர்களாக மாயவன், சுப்பிரமணியன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் போராட்டம் தொடரும் என்று அறிவித்தனர். அதன்படி, கடந்த 3 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது.
இந்த நிலையில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் உயர்மட்டக்குழு கூட்டம் நேற்று சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டம் முடிந்ததும் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:-
11-ந்தேதி முதல் (நாளை) காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்வது எனவும், அன்றைய நாளிலும், 12-ந்தேதியும்(செவ்வாய்க்கிழமை) அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் 13-ந்தேதி(புதன்கிழமை) முதல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும். இதில் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் பங்கேற்பார்கள்.
நீதிமன்றத்தில் எங்கள் மீது வழக்கு தொடர்ந்தாலும் அதனை சந்திப்போம். இந்த கோரிக்கைகளுடன் 4-வது கோரிக்கையாக ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் நாங்கள் சேர்த்து இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வருகிற 11-ந்தேதி முதல் மாணவர்களுக்கு தேர்வு நடக்கவிருப்பதால் உங்களின் வேலைநிறுத்தம் மாணவர்களை பாதிக்காதா? என்று நிருபர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு பதிலளித்த அவர், ‘இதுகுறித்து அக்கறை எடுக்க வேண்டியது தமிழக அரசு தான். கோரிக்கைகளுக்காக 14 ஆண்டுகளாக போராடி வருகிறோம். இந்த போராட்டத்துக்கு தமிழக அரசு தான் முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும். கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால், சனி, ஞாயிற்றுக்கிழமைகள் என்று கூட பார்க்காமல் பாடங்களை நடத்துவோம்’ என்றார்.
இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஆசிரியர்கள் சங்கம் உள்பட மொத்தம் 92 சங்கங்கள் பங்கேற்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

Related Tags :
Next Story