விடுமுறை நாளிலும் இயங்கின: வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் குவிந்த வாகன ஓட்டிகள்
விடுமுறை நாளிலும் இயங்கிய வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வாகன ஓட்டிகள் குவிந்தனர்.
சென்னை,
வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவின் எதிரொலியாக நேற்று விடுமுறை நாளிலும் இயங்கிய வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வாகன ஓட்டிகள் குவிந்தனர். ஓட்டுனர் உரிமங்களை புதுப்பிக்கவும், புதிதாக பழகுநர் உரிமம் பெறவும் வருபவர்களின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்துள்ளது.
அசல் ஓட்டுனர் உரிமம்
இந்தியாவில் சாலை விபத்துகளின் எண்ணிக்கையில் தமிழகம் முதல் இடத்தில் இருக்கிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில், கடந்த 1-ந்தேதி முதல் வாகன ஓட்டிகள் அனைவரும் அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் நீதிபதி எம்.துரைசாமி, 5-ந்தேதி வரை தமிழக அரசு இந்த உத்தரவை அமல்படுத்தக்கூடாது என்று உத்தரவிட்டார்.
ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்குகளை 4-ந்தேதி விசாரித்தபோது, தனி நீதிபதியின் உத்தரவை நீட்டிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றது. அதனால் 5-ந்தேதி முதல் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது. மீண்டும் இந்த வழக்கு 15-ந்தேதி விசாரணைக்கு வருகிறது.
வாகன ஓட்டிகள் குவிந்தனர்
தமிழக அரசின் இந்த உத்தரவால் இதுவரை ஓட்டுனர் உரிமம் பெறாதவர்களும், ஓட்டுனர் உரிமம் காலாவதியான பின்னர் புதுப்பிக்காதவர்களும், ஓட்டுனர் உரிமத்தை தொலைத்தவர்களும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.
இதனால் விடுமுறை தினமான நேற்றும் அரசு உத்தரவின்படி அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களும் இயங்கின. இந்த அலுவலகங்களில் ஓட்டுனர் உரிமங்களை பெறுவதற்காக வாகன ஓட்டிகள் ஏராளமானோர் குவிந்தனர். இதன்காரணமாக அலுவலகங்களில் பிற பணிகளில் ஈடுபடும் அலுவலர்களும் ஓட்டுனர் உரிமம் தொடர்பான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
3 மடங்கு அதிகரிப்பு
இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தமிழக அரசின் உத்தரவுக்கு பின்னர், பழகுநர் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கும், காலாவதியான ஓட்டுனர் உரிமங்களை புதுப்பிப்பதற்கும் வருபவர்களின் எண்ணிக்கை வழக்கத்தைவிட 3 மடங்கு அதிகரித்து உள்ளது. நிரந்தர ஓட்டுனர் உரிமம் பெறுபவர்களின் எண்ணிக்கை வழக்கம்போல் உள்ளது.
காரணம், தற்போது பழகுநர் ஓட்டுனர் உரிமத்துக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் ஒரு மாதம் கழித்து தான் நிரந்தர ஓட்டுனர் உரிமம் பெறமுடியும். அப்போது தான் அந்த எண்ணிக்கை அதிகரிக்கும். அசல் ஓட்டுனர் உரிமத்தை தொலைத்தவர்களும் நகல் ஓட்டுனர் உரிமம் கேட்டு ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர்.
மது அருந்திவிட்டு...
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களிடம் இருந்து போலீசார் அசல் ஓட்டுனர் உரிமங்களை கைப்பற்றி எங்களிடம் அளிப்பார்கள். அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பும் பணிகளிலும் ஈடுபடுகிறோம். விளக்கம் அளிக்க வருபவர்களுக்கு அதிகபட்சம் 6 மாதம் வாகனம் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்படும். அதன்பின்னரே அவர்களுக்கு மீண்டும் ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும்.
ஆனால் பெரும்பாலானவர்கள் விளக்கம் அளிக்க வருவதில்லை. இந்த வழக்கில் சிக்கி 6 மாதங்கள் கடந்தவர்களும் தங்களின் அசல் ஓட்டுனர் உரிமத்தை கேட்டு வருகின்றனர். 6 மாதம் கடந்து இருந்தால் அவர்களிடம் அசல் ஓட்டுனர் உரிமத்தை ஒப்படைத்து விடுகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Tags :
Next Story