ஆளுநரின் நடவடிக்கைக்கு பின் அடுத்தக்கட்ட முடிவு குறித்து அறிவிக்கப்படும் ஆளுநரை சந்தித்த பின் ஸ்டாலின் பேட்டி
ஆளுநரின் நடவடிக்கைக்கு பின் அடுத்தக்கட்ட முடிவு குறித்து அறிவிக்கப்படும் என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
திமுக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி எம்எல்ஏக்கள் ஆகியோர் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று மாலை சந்தித்து மனு அளித்தனர்.
ஆளுநரை சந்தித்த பின் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் செய்தியார்களிடம் கூறியதாவது:
சட்டப்பேரவையை கூட்டி முதலமைச்சர் பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட கோரி வலியுறுத்தினோம். ஒருவார காலத்திற்குள் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடவில்லை என்றால் சட்டரீதியாக நீதிமன்றத்தை நாடுவோம். நாமக்கல்லில் வங்கியில் ரூ 246 கோடியை டெபாசிட் செய்தது யார்? ஆளுநரின் நடவடிக்கைக்கு பின் அடுத்தக்கட்ட முடிவு குறித்து அறிவிக்கப்படும் .
இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
Related Tags :
Next Story