மேலடுக்கு சுழற்சி இருப்பதால் தமிழகத்தில் இன்று அநேக இடங்களில் மழை பெய்யும் வானிலை அதிகாரிகள் தகவல்
தமிழகத்தில் தென் மாவட்டங்கள் மீது மேலடுக்கு சுழற்சி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) அநேக இடங்களில் மழை பெய்யும்.
சென்னை,
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக பல மாவட்டங்களில் மழை பெய்துவருகிறது. சென்னை வானிலை மைய அதிகாரிகள் கூறியதாவது:–
தமிழகத்தில் தென் மாவட்டங்கள் மீது மேலடுக்கு சுழற்சி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) அநேக இடங்களில் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும். சென்னையில் இரவு நேரத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். தொடர்ந்து 14–ந் தேதிவரை சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
நேற்று காலை 8–30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:–
ஆலங்காயம் 7 செ.மீ., வேலூர் மாவட்டம் திருப்பத்தூர், பாம்பன், ஊத்தங்கரை, தளி, வேலூர் தலா 4 செ.மீ., ஆம்பூர், ஓசூர், பாளையங்கோட்டை, குடியாத்தம், ராதாபுரம், கிருஷ்ணகிரி தலா 3 செ.மீ., ஜெயங்கொண்டம், மேலலாத்தூர், காட்டுமன்னார்கோவில், பழனி, பூதப்பாண்டி, சூளகிரி, ஸ்ரீவைகுண்டம், ராமேசுவரம், பெரியநாயக்கன்பாளையம், பண்ருட்டி, போச்சம்பள்ளி தலா 2 செ.மீ. மழை பெய்துள்ளது. மேலும் 30–க்கும் மேற்பட்ட இடங்களில் 1 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
Related Tags :
Next Story