கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்று மும்பை பயணம்


கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்று மும்பை பயணம்
x
தினத்தந்தி 11 Sept 2017 1:00 AM IST (Updated: 10 Sept 2017 11:00 PM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசியலில் அசாதாரண சூழ்நிலை நிலவி வரும் நிலையில், இன்னும் நிரந்தர கவர்னர் என்று யாரும் நியமிக்கப்படவில்லை.

சென்னை, 

தமிழக அரசியலில் அசாதாரண சூழ்நிலை நிலவி வரும் நிலையில், இன்னும் நிரந்தர கவர்னர் என்று யாரும் நியமிக்கப்படவில்லை. மராட்டிய மாநில கவர்னரான வித்யாசாகர் ராவ் தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக இருந்து வருகிறார். இதனால், மும்பைக்கும், சென்னைக்கும் அவர் சென்று வந்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், கடந்த மாதம் இறுதியில் சென்னை வந்த கவர்னர் வித்யாசாகர் ராவ், தொடர்ந்து ராஜ் பவனிலேயே தங்கியுள்ளார். அவரை, எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் தலைமையில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களும், தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்களும் சென்று சந்தித்து, தமிழக அரசு மெஜாரிட்டியை இழந்துவிட்டதாகவும், உடனே முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மெஜாரிட்டியை நிரூபிக்க வலியுறுத்த வேண்டும் என்றும் கவர்னரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதே கோரிக்கையுடன் நேற்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்தனர். இந்த நிலையல், இன்று காலை கவர்னர் வித்யாசாகர் ராவ் சென்னையில் இருந்து மும்பை செல்கிறார். காலை 11.20 மணி விமானத்தில் மும்பை செல்லும் அவர், சில நாட்கள் அங்கு தங்கியிருந்து, அங்குள்ள பணிகளை கவனிப்பார் என தெரிகிறது.



Next Story