‘நீட்’ தேர்வை எதிர்த்து போராட்டம் நடத்தும் ஆசிரியை சபரிமாலாவுக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு


‘நீட்’ தேர்வை எதிர்த்து போராட்டம் நடத்தும் ஆசிரியை சபரிமாலாவுக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு
x
தினத்தந்தி 10 Sept 2017 11:42 PM IST (Updated: 10 Sept 2017 11:41 PM IST)
t-max-icont-min-icon

‘நீட்’ தேர்வை எதிர்த்து போராட்டம் நடத்தும் ஆசிரியை சபரிமாலாவுக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னை, 

தி.மு.க. தலைமைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

தி.மு.க.வின் செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சார்பில், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தனது ஆசிரியர் பதவியை ராஜினாமா செய்த, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியை சபரிமாலாவை, விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பொன்முடி நேரில் சந்தித்தார்.

அப்போது, ஆசிரியை சபரிமாலாவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட மு.க.ஸ்டாலின், ஆசிரியை சபரிமாலாவின் உணர்வுகளையும், தியாகத்தையும் பெரிதும் மதிப்பதாகவும், மருத்துவம் உள்ளிட்ட உயர் கல்விகளில் தமிழக மாணவ–மாணவிகளின் உரிமைகளை பாதுகாக்கவும், சமூகநீதியை நிலை நிறுத்தவும், மாநில உரிமைகளை மீட்கவும் நடைபெறும் அனைத்து விதமான முயற்சிகளுக்கு தி.மு.க. என்றைக்கும் முன்னின்று, துணை நிற்கும் என்று தெரிவித்தார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story