நதிகளை பாதுகாக்க வேண்டியது நம் கடமை நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தல்
நதிகளை பாதுகாக்க வேண்டியது நம் கடமை நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
நதிகளை இணைப்போம் பாரதம் காப்போம் இயக்கம் சார்பில் இந்தியா முழுவதும் நதிகள் இணைப்புக்கான விழிப்புணர்ச்சி கூட்டங்களும், பேரணிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. கன்னியாகுமரியில் இருந்து இமய மலை வரை நதிகள் இணைப்பு விழிப்புணர்வு பேரணியும் நடத்தபடுகிறது.
ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில் நதிகள் இணைப்பை வலியுறுத்தி பேசியவாறு நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:–
ரத்த நாளங்கள் இல்லை என்றால் உடம்பு இயங்காது. நதிகள் பூமியின் ரத்த நாளங்கள். அதை பாதுகாக்கவேண்டியது நம் எல்லோருடைய கடமை. இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளையும் ஜீவ நதிகளாக்க மதிப்புக்குரிய சத்குரு எடுக்கும் இந்த மாபெரும் முயற்சி வெற்றிப்பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
இவ்வாறு ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story