டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ள விடுதியில் கடும் கட்டுப்பாடு

குடகு,
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ள விடுதியில் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. நிருபர்களை சந்தித்து பேட்டி கொடுக்க எம்.எல்.ஏ.க்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்துவரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதம் கொடுத்தனர். பின்னர் அவர்கள் புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.
எம்.எல்.ஏ.க்கள் வழங்கிய ஆதரவு வாபஸ் கடிதம் குறித்து கவர்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனிடையே ஆதரவு வாபஸ் பற்றி விளக்கம் கேட்டு சபாநாயகர் 2 முறை எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார். இதனால் சொகுசு விடுதியில் தங்கி இருந்த எம்.எல்.ஏ.க்கள் குழப்பமும், சோர்வும் அடைந்தனர். இந்நிலையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி அணி இறங்கியது.
இதன் பலனாக ஜக்கையன் எம்.எல்.ஏ. தினகரன் அணியில் இருந்து பிரிந்து எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த தினகரன் தன்னிடம் உள்ள எம்.எல்.ஏ.க்களை தக்கவைத்து கொள்ள வேறு இடத்துக்கு மாற்ற முடிவு செய்தார். இதற்காக கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் மடிக்கேரியில் உள்ள சொகுசு விடுதியில் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டன.
அந்த சொகுசு விடுதியில் நேற்று முன்தினம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டனர். எம்.எல்.ஏ.க்களின் பெயரில் விடுதி அறைகள் பதிவு செய்யாமல், வெவ்வேறு பெயர்களில் அறைகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
எம்.எல்.ஏ.க்கள் தங்கி உள்ள அந்த விடுதியில் சுற்றுலா பயணிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுதி நிர்வாகம் கடும் கட்டுப்பாடு விதித்து உள்ளது. எம்.எல்.ஏ.க்கள் நிருபர்களை சந்தித்து பேட்டி அளிக்க தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்க தனியார் காவலர்கள் விடுதியை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இது பற்றி அறிந்த நிருபர்கள் பலர் விடுதி முன்பு முகாமிட்டு உள்ளனர். இதனால் எம்.எல்.ஏ.க்களை வேறு இடத்துக்கு மாற்ற தினகரன் திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது.

Related Tags :
Next Story