தென்பெண்ணை ஆற்றில் குளித்த மாணவர் உள்பட 2 பேரை வெள்ளம் இழுத்து சென்றது
தென்பெண்ணை ஆற்றில் குளிக்க சென்ற பிளஸ்-2 மாணவர் உள்பட 2 பேரை வெள்ளம் இழுத்துச்சென்றது.
செங்கம்,
தென்பெண்ணை ஆற்றில் குளிக்க சென்ற பிளஸ்-2 மாணவர் உள்பட 2 பேரை வெள்ளம் இழுத்துச்சென்றது. அவர்களை தீயணைப்பு படையினர் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த கொண்டம் கிராமத்தில் நடைபெற்ற காதணி விழாவில் கலந்துகொள்வதற்காக பெங்களூரு ராஜாஜி நகர் பகுதியை சேர்ந்த அஜய் (வயது 18) என்பவரும், விஜய் (18) என்பவரும் வந்திருந்தனர். அஜய் பிளஸ்-2 படித்து வந்தார். விஜய் மோட்டார் சைக்கிள் மெக்கானிக் ஆவார்.
இருவரும் கோவில் அருகே சற்று தொலைவில் தென்பெண்ணை ஆற்றில் குளிப்பதற்காக சென்று உள்ளனர். தற்போது கிருஷ்ணகிரி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே யாரும் ஆற்றில் இறங்கி குளிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
ஆனால் இதனை அறியாத அவர்கள் இருவரும் ஆற்றில் இறங்கி குளித்தனர். அப்போது இருவரையும் வெள்ளம் இழுத்துச்சென்றது. இதனை கண்ட அவரது உறவினர்கள் கூச்சலிட்டனர்.
அக்கம்பக்கத்தினர் உடனடியாக மேல் செங்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து செங்கம் போலீசார், வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் செங்கம் தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி 2 பேரையும் தொடர்ந்து தேடி வருகின்றனர். அவர்களது கதி என்ன என்பது தெரியவில்லை. இரவு நேரம் ஆகிவிட்டதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இன்று மீண்டும் தேடுதல் பணி நடக்கிறது.

Related Tags :
Next Story