புதிய பார்வை ஆசிரியர் ம.நடராஜன் ஆஸ்பத்திரியில் அனுமதி
ம.நடராஜன் கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
சென்னை,
அ.தி.மு.க. அம்மா அணியின் பொதுச்செயலாளரான சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராஜன் கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னையை அடுத்த தாம்பரம் மேடவாக்கத்தில் உள்ள குளோபல் ஆஸ்பத்திரியில் ம.நடராஜன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு கல்ஈரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக லண்டனில் இருந்து பிரத்யேகமாக டாக்டர் வரவழைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள ம.நடராஜன், தனது மனைவி சசிகலாவை பார்க்க விருப்பம் தெரிவித்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. நாளை அ.தி.மு.க. பொதுக்குழு-செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், பெங்களூரு சிறைச்சாலையில் உள்ள சசிகலா, தனது கணவரை பார்க்க பரோலில் வெளியே வருவாரா? என்பது இன்று (திங்கட்கிழமை) தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Tags :
Next Story