தமிழகத்தில் சில இடங்களில் 2 நாட்கள் மழை பெய்யும் -வானிலை மையம்
அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்ய உள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அடுத்து 2 நாட்களுக்கு தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்ய உள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறுகையில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்து 2 நாட்களுக்கு தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ய உள்ளது. தென் மேற்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் 1 –ந்தேதி முதல் நேற்று வரை வழக்கமாக பெய்யவேண்டிய மழையை விட கூடுதலாக 47 சதவீதம் பெய்துள்ளது என்றார்.
நேற்று காலை 8–30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் குன்னூர் 9 செ.மீ. பெரம்பலூர், மேட்டுக்குப்பம் தலா 5 செ.மீ., வெம்பாவூர், திருவண்ணாமலை தலா 4 செ.மீ. மழை பெய்துள்ளது. மற்ற இடங்களிலும் லேசான மழை பதிவாகி உள்ளது.
Related Tags :
Next Story