ஜெயலலிதா அமர்ந்த முதலமைச்சர் இருக்கையில் ஈபிஎஸ்,ஓபிஎஸ்சை பார்க்க எங்களால் முடியவில்லை -டிடிவி தினகரன்


ஜெயலலிதா அமர்ந்த முதலமைச்சர் இருக்கையில் ஈபிஎஸ்,ஓபிஎஸ்சை பார்க்க எங்களால் முடியவில்லை -டிடிவி தினகரன்
x
தினத்தந்தி 12 Sept 2017 12:36 PM IST (Updated: 12 Sept 2017 12:37 PM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதா இருந்த பொதுச்செயலாளர் பதவியை யாரும் வகிக்ககூடாது என்றால். ஜெயலலிதா அமர்ந்த முதலமைச்சர் இருக்கையில் ஈபிஎஸ்,ஓபிஎஸ்சை பார்க்க எங்களால் முடியவில்லை என டிடிவி தினகரன் கூறினார்.

சென்னை

டிடிவி தினகரன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

கட்சியின் பொதுச் செயலாளர்தான் பொதுக்குழுவை கூட்ட முடியும். கட்சி, ஆட்சியை காப்பாற்ற எனது ஆதரவு எம்எல்ஏக்கள் எந்த முடிவும் எடுக்க தயாராக உள்ளனர்.தேர்தல் களத்தில் எங்களுக்கும், திமுகவுக்கும் தான் போட்டி

ஆட்சி தொடர்ந்தால் கட்சிக்கு கெட்டப்பெயர் ஏற்படும் என்பதாலேயே முதலமைச்சரை மாற்ற முயற்சி செய்கிறோம்.  முதலமைச்சராக பழனிசாமியை தேர்வு செய்த போது அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, வீரமணி, பெஞ்சமின் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

இருக்கிற வரை கட்சிப் பதவி மற்றும் ஆட்சியில் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள்

தேர்தலில் நிற்க சில அமைச்சர்களுக்கு பயம் ஏற்பட்டுள்ளது. பொதுக்குழுவில் எந்த தீர்மானம் நிறைவேற்றினாலும் அது நீதிமன்ற உத்தரவுக்கு உட்பட்டது. ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வேலையை தொடங்கிவிட்டேன்.

நடைபெற்றது பொதுக்குழு அல்ல, கூட்டம் .ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வேலையில் இறங்கிவிட்டேன். எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு தெவித்து வெளியேறியவர்தான் செம்மலை.

ஜெயலலிதா இருந்த பொதுச்செயலாளர் பதவியை யாரும் வகிக்ககூடாது என்றால். ஜெயலலிதா அமர்ந்த முதலமைச்சர் இருக்கையில் ஈபிஎஸ்,ஓபிஎஸ்சை பார்க்க எங்களால் முடியவில்லை. திமுகவுடன் கைகோர்த்துள்ளதாக சிலர் பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். தேர்தல் வந்தால் எங்களுக்கும் திமுகவுக்கும்தான் போட்டி இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story