எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க வழக்கு


எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க வழக்கு
x
தினத்தந்தி 12 Sep 2017 8:14 AM GMT (Updated: 12 Sep 2017 8:14 AM GMT)

எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட கோரி ஐகோர்ட்டில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.


சென்னை
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேர், ஆளுநரை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது தங்களுக்கு நம்பிக்கையில்லை என கடிதம் அளித்தனர். இதையடுத்து அவர்கள் ரிசார்ட்டில் தங்கியுள்ளனர்.

இந்த கடிதத்தை அடிப்படையாக வைத்து, ஏற்கனவே 2 முறை திமுக சார்பில் தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவிடம் மனுக்கள் வழங்கப்பட்டன. சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்பது கோரிக்கை. ஆனால் கவர்னர்  இன்னும் இதில் முடிவை எடுக்கவில்லை. இந்த நேரத்தில், எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட கோரி ஐகோர்ட்டில்  திமுக சார்பில் மனு தாக்கல்ப்ப செய்யட்டு உள்ளது.

Next Story