சீர்காழியில் தண்டவாளத்தில் இரும்பு ராடு வைத்து ரெயிலை கவிழ்க்க சதி
சீர்காழியில் தண்டவாளத்தில் இரும்பு ராடு வைத்து ரெயிலை கவிழ்க்க சதி நடைபெற்றது கண்டு பிடிக்கப்பட்டது.
நாகை மாவட்டம் சீர்காழி ரெயில் நிலையத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் ரெயில் பாதையில் தண்டவாளத்தின் குறுக்கே லெவல் கிராசிங் அருகே 15 அடி நீள இரும்பு ராடு வைக்கப்பட்டு இருந்தது.
இந்த இரும்பு ராடு கட்டு கம்பியால் இரு புறமும் கட்டப்பட்டு இருந்தது. இதனால் இன்று காலை 4.30 மணிக்கு சீர்காழி வந்த உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் சிக்னல் கிடைக்காமல் சீர்காழி ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. பின்னர் ரெயில்வே ஊழியர்கள் சென்று பார்த்த போது தண்டவாளத்தில் இருந்த இரும்பு ராடை கண்டுபிடித்து அதனை அகற்றினர். அதன் பிறகு 20 நிமிடம் தாமதாக உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டுச் சென்றது. மற்ற ரெயில்களும் தாமதமாக புறப்பட்டு சென்றது.
தண்டாவளத்தில் இரும்பு ராடை வைத்து ரெயிலை கவிழ்க்க சதி நடைபெற்று இருப்பது தெரியவந்தது. இந்த சதி செயலில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகள் யார்? என்பது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story