மாநில செய்திகள்

தலைமை நிலைய செயலாளர் பதவி எடப்பாடி பழனிசாமி நீக்கம் தினகரன் அறிவிப்பு + "||" + Head of the Chief Secretary Edappadi Palaniasamy removal Dinakarans announcement

தலைமை நிலைய செயலாளர் பதவி எடப்பாடி பழனிசாமி நீக்கம் தினகரன் அறிவிப்பு

தலைமை நிலைய செயலாளர் பதவி எடப்பாடி பழனிசாமி நீக்கம் தினகரன் அறிவிப்பு
தலைமை நிலைய செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்கம் செய்து தினகரன் அறிவித்து உள்ளார்.
சென்னை,

அ.தி.மு.க.வில் எடப்பாடி  பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணைந்த பிறகு நேற்று செயற்குழு பொதுக்குழுவை கூட்டி சசிகலா தினகரன் நியமனத்தை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

ஆனால் டி.டி.வி.தினகரன் துணை பொதுச்செயலாளர் பதவியில் நீடித்து வருவதாக கூறி கட்சி நிர்வாகிகளை நீக்கி வருகிறார். அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

அ.தி.மு.க. அம்மா அணி தலைமை நிலைய செயலாளர் பொறுப்பில் உள்ள எடப்பாடி பழனிசாமி இன்று முதல் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். அதற்கு பதில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் அந்த பொறுப்பில் நியமிக்கப்படுகிறார். பொருளாளர் பொறுப்பில் உள்ள திண்டுக்கல் சீனிவாசன் விடுக்கப்பட்டு புதிய பொருளாளராக தஞ்சாவூர் எம்.எல்.ஏ. எம்.ரெங்கசாமி நியமிக்கப்படுகிறார். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.