1013 உதவி மருத்துவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி


1013 உதவி மருத்துவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி
x
தினத்தந்தி 13 Sept 2017 12:02 PM IST (Updated: 13 Sept 2017 12:02 PM IST)
t-max-icont-min-icon

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 1013 உதவி மருத்துவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி.

சென்னை

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 1013 உதவி மருத்துவர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசியதாவது,

தமிழகத்தின் கன்னியாகுமரி, நாமக்கல், சேலம், திருச்சி போன்ற 12 சுகாதார மாவட்டங்களில் டெங்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் டெங்கு தாக்கம் இருக்கிறது. அதனை பல முனை நடவடிக்கை மூலம் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது.சென்னையில் தற்போது காய்ச்சலின் தாக்கம் சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் டெங்குவை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் சுகாதாரத்துறை செயல்பட்டு வருகிறது

புறநோயாளியாக காய்ச்சல் பரிசோதனைக்கு வந்தாலும் உள்நோயாளியாகவே அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாதாரன காய்ச்சல் வந்தாலும் அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துக்கொள்ளுங்கள். டெங்கு காய்ச்சல் பரிசோதனை முடிவுகளை 24 மணி நேரத்தில் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டெங்கு முழுமையாக கட்டுப்படுத்த பூச்சி வல்லுநர்களை கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 3 ஆயிரத்து 200 சுகாதார பணியாளர்கள் காய்ச்சல் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். கிராமப்புறங்களில் மருத்துவர்களை அதிகரிக்கும் வகையில் ஆயிரத்து 13 மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.  இவ்வாறு அவர் கூறினார்.

Next Story