சிலை கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த டிஎஸ்பி காதர்பட்ஷா கைது


சிலை கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த டிஎஸ்பி காதர்பட்ஷா கைது
x
தினத்தந்தி 14 Sept 2017 11:59 AM IST (Updated: 14 Sept 2017 11:58 AM IST)
t-max-icont-min-icon

சிலைக்கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த காவல்துறை டிஎஸ்பி காதர்பாட்ஷா கைது செய்யப்பட்டார்.

சென்னை

கடந்த 2008ஆம் ஆண்டு, விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை அருகே விவசாய நிலத்தில் 3 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

இதனை தாய்லாந்திற்கு கடத்த உதவியதாக டிஎஸ்பி காதர் பாட்ஷா மீது குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக அருப்புக்கோட்டை ஆலடிப்பட்டி காவல் நிலையத்தில் ஐம்பொன் சிலையை கடத்தி விற்றதாக புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் டிஎஸ்பி காதர் பாட்ஷா தலைமறைவாக இருந்தார். அவரைப் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீசார், காதர் பாட்ஷாவை நேற்று கும்பகோணத்தில் கைது செய்தனர்.

 கைது செய்யப்பட்ட காதர் பாட்ஷா, கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story