சபாநாயகர் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியை தொடங்கி விட்டார் தமிழக அரசு பதில்
சபாநாயகர் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியை தொடங்கி விட்டார் என ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்து உள்ளது.
சென்னை
எடப்பாடி அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க கோரி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த மனுவை நீதிபதி விசாரணைக்கு ஏற்றுக் கொண்டார்.
தினகரனை ஆதரிக்கும் 18 எம்.எல். ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று அரசு தலைமை வக்கீலிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். இன்று பிற்பகல் 2.15 மணிக்குள் சட்ட பேரவை செயலாளரிடம் கேட்டு தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
மதியம் அரசு வக்கீல் தனது பதில் மனுவை தாக்கல் செய்தார் அதில் ,

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க முடியாது என உறுதி அளிக்க முடியாது. சபாநயாகர் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏகள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியை தொடங்கி விட்டார்.
சபாநாயகர் முடிவில் கோர்ட் தலையிட முடியாது. தினகரன் தரப்பில் இருந்து ஒரே ஒரு எம்.எல்.ஏ மட்டுமே கோர்ட்டை நாடி உள்ளார். பெரும்பான்மையை நிரூபிக்கும் ஸ்டாலின் வழக்குடன் இந்த வழக்கை சேர்க்க கூடாது என மனுவில் கூறிப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story