தமிழகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம்: ஜாங்கிட், திரிபாதி, காந்திராஜன் டி.ஜி.பி.க்களாக பணி நியமனம்
தமிழகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
சென்னை,
தமிழகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். ஜாங்கிட், திரிபாதி, காந்திராஜன் ஆகியோர் டி.ஜி.பி.க்களாக பணி நியமனம் செய்யப்பட்டனர். சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக விஜய்குமார் பொறுப்பு ஏற்கிறார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
* சங்காராம் ஜாங்கிட் - பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றும் இவர், டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
* ஜே.கே.திரிபாதி - தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக உள்ள இவர், டி.ஜி.பி. ஆக பதவி உயர்வு பெற்றார். தமிழக சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவராக மாற்றப்பட்டு உள்ளார்.
* சி.கே.காந்திராஜன் - மாநில மனித உரிமை கமிஷன் கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றும் இவர், டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். மாநில மனித உரிமை கமிஷனின் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
* சுஜித்குமார் - சேலம் ஊரக உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரியும் இவர், சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றுள்ளார். கோவை நகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
* ரோஹித்நாதன் ராஜகோபால் - கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டான இவர், சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றுள்ளார். சென்னை அடையாறு துணை கமிஷனராக மாற்றப்பட்டு உள்ளார்.
* பி.சுந்தர வடிவேல் - சென்னை அடையாறு துணை கமிஷனராக பணியாற்றும் இவர், சென்னை ஐகோர்ட்டு பாதுகாப்பு பிரிவு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த பதவி புதிய பதவி ஆகும்.
* என்.தமிழ்செல்வம் - தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தின் கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றும் இவர், தமிழக போலீஸ் வீட்டு வசதி கழகத்தின் தலைவர்-மேலாண்மை இயக்குனராக பதவி ஏற்பார்.
* விஜய்குமார் - தமிழக போலீஸ் வீட்டு வசதி கழகத்தின் தலைவர்-மேலாண்மை இயக்குனராக பணியாற்றும் இவர், தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
* சுனில்குமார் சிங் - ஊர்க்காவல் படை கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றும் இவர், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக மாற்றப்பட்டு உள்ளார்.
* கே.வன்னிய பெருமாள் - சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாக பதவி வகிக்கும் இவர், தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தின் கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
* கருணாசாகர் - பணி அமைப்பு கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த இவர், ஊர்க்காவல் படை கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
* ராஜீவ்குமார் - போலீஸ் நவீன மயமாக்கல் கூடுதல் டி.ஜி.பி.யான இவர், போலீஸ் நலப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக மாற்றப்பட்டு உள்ளார்.
* பிரதீப் வி.பிலிப் - போலீஸ் நலப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றும் இவர், தமிழக சிவில் சப்ளை சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி.யாக பொறுப்பு ஏற்பார்.
* வினித் தேவ் வான்கடே - காத்திருப்போர் பட்டியலில் இருந்த இவர், சென்னை நவீன மயமாக்கல் ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story