இரட்டை இலை யாருக்கு? அக்டோபர் 31ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் முடிவு செய்ய கோர்ட் உத்தரவு


இரட்டை இலை யாருக்கு?  அக்டோபர் 31ஆம் தேதிக்குள்  தேர்தல் ஆணையம் முடிவு செய்ய கோர்ட் உத்தரவு
x
தினத்தந்தி 15 Sept 2017 1:17 PM IST (Updated: 15 Sept 2017 1:17 PM IST)
t-max-icont-min-icon

இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது குறித்து அக்டோபர் 31ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் முடிவு செய்ய வேண்டும் என மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

மதுரை

இரட்டை இலை சின்னம்  யாருக்கு என்பதை அக்டோபர் 31ஆம் தேதிக்குள் முடிவுசெய்ய தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இரட்டை இலை யாருக்கு என்பது குறித்து விரைந்து முடிவு காண வேண்டும் என்று கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர்  மதுரை ஐகோர்ட் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இதனை இன்று விசாரித்த நீதிமன்றம், இரட்டை இலை யாருக்கு என்பதை அக்டோபர் 31ஆம் தேதிக்குள் முடிவுசெய்ய தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரட்டை இலை சின்னம் அதிக செல்வாக்கு பெற்றிருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருப்பதால் விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் அதிமுக நிர்வாகிகள் அனைவரையும் கூட்டி வாக்குப்பதிவு அதன் அடிப்படையில் முடிவுசெய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் சமாஜ்வாதி கட்சியில் முலாயம் சிங் – நிதிஷ் குமார் அணியினர் சைக்கிள் சின்னத்திற்காக போட்டியிட்ட போது தலைமைத் தேர்தல் ஆணையம் விரைந்து முடிவு எடுத்துள்ளதை முன்னுதாரணமாக சுட்டிக்காட்டி இந்தத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Next Story