தமிழிசை வெளியிட்ட கருத்துக்கு, பதில் சொல்லி தரத்தை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை - ஸ்டாலின்


தமிழிசை வெளியிட்ட கருத்துக்கு, பதில் சொல்லி தரத்தை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை - ஸ்டாலின்
x
தினத்தந்தி 15 Sept 2017 7:54 PM IST (Updated: 15 Sept 2017 7:54 PM IST)
t-max-icont-min-icon

தமிழிசை வெளியிட்ட கருத்துக்கு, பதில் சொல்லி தரத்தை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னை விமான நிலையத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் செய்தியார்களிடம் கூறியதாவது:

ஆட்சியை தக்கவைக்க எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவதிலேயே அதிமுக அரசு கவனமாக உள்ளது.  அரசு ஊழியர்கள் போராட்டம் குறித்து தமிழக அரசு அக்கறை காட்டவில்லை.  போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும். அரசு ஊழியர்கள் போராட்டத்தை திரும்பப்பெற்றது வரவேற்கத்தக்கது. நீட் விவகாரத்தில் கருணாநிதியை தொடர்புபடுத்தி தமிழிசை வெளியிட்ட கருத்துக்கு, பதில் சொல்லி தரத்தை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை. 

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story