உழைப்பாளர்களை தொண்டர்களாக கொண்ட அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது முதல்-அமைச்சர் பழனிசாமி
உழைப்பாளர்களை தொண்டர்களாக கொண்ட அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என முதல்-அமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை,
சென்னை தங்கசாலையில் அண்ணாவின் 109-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் பழனிசாமி கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
தமிழர்களுக்கு ஒரு அடையாளத்தை உருவாக்கி தந்தவர் அண்ணா. பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை கொண்டாட தகுதியுள்ள ஒரே கட்சி அதிமுக தான். ஆட்சியையும், கட்சியையும் அழிக்க ஒரு சிலர் துடிக்கின்றனர். நமது மாநிலம் தமிழ்நாடு என அழைக்கப்படுவதற்கு காரணமானவர் பேறிஞர் அண்ணா. திமுக ஆட்சியில் இருந்த போது மக்களுக்கு என்ன செய்தது? உழைப்பாளர்களை தொண்டர்களாக கொண்ட அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. கடும் வறட்சியிலும் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story